நீதியானதும் நிம்மதியானதுமான நாட்டை உருவாக்க எம்முடன் இணையுங்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் இளங்குமரன்..!!!
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல்வாதிகளை தேடி மக்கள் அலைய வேண்டிய தேவை இருக்காது. அரச இயந்திரம் முற்று முழுதாக
மக்களுக்காவே வேலை செய்யும் என தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் மேலே இருந்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை. அரசியல்வாதி என்பவன் என்றும் மக்களுடன் நண்பனாக இன்ப துன்பங்களில் பங்காளனாக, பிரச்சினைகளின் போது கைகொடுக்கும் உறவாக இருக்கும் அரசியல் கலாசாரமொன்றையே உருவாக்க விரும்புகின்றோம். நீதியானதும் நிம்மதியானதுமான நாடொன்றினை உருவாக்க நாம் ஆரம்பித்துள்ள பயணம் மிகவும் நீண்டது. இதற்குள் ஏற்பட்ட பின்னடைவுகள் பிரச்சினைகள், சலால்கள் எல்லாம் மிகவும் கடினமானவை. இன்று இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் கனவு கண்ட அந்த எதிர்காலத்தினை உருவாக்கும் பணியினை ஆரம்பித்துள்ளோம். இதன் பங்காளர்களாக நீங்களும் இணையுங்கள் என அவர் தெரிவித்தார்.