யாழில் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் கொள்ளை..!!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புகுந்த திருடர்கள் நகைகள் மற்றும் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.