Saturday, 2 November 2024

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை..!!!

SHARE


கண்டியில் உள்ள பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து தவறுதாக அமிலத்தை (ஆசீட்) அருந்தி குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தை ஒன்றே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர் சென்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தையே குழந்தை அருந்தியுள்ளது என தெரியவருகின்றது.

இதனையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தது.
SHARE