இன்றைய ராசிபலன் - 20.11.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையை கொடுத்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வீட்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் நல்லது நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாள் பழகிய நண்பர்களை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்று மனது சந்தோஷம் அடையக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த பிரச்சினைகள் எல்லாம் தானாக சரியாகிவிடும். மன நிம்மதி இருக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும், பார்த்துக்கோங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வியாபாரங்களை தொடங்க தேவையான வேலைகளை செய்யலாம். புது வேலை தேடுவது, புது வீடு பார்ப்பது, சொத்து சுகம் வாங்க, முயற்சிகளை செய்யுங்கள். ஏதாவது விற்க வேண்டும் என்றாலும் அதற்கான முயற்சிகளை செய்யலாம். நிச்சயம் உங்களுக்கு சாதகமான நல்லது நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று முக்கியமான விஷயத்தை மறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமான வேலையாக இருந்தால் கைபேசியில் அலாரம் வையுங்கள். இல்லை என்றால் அடிக்கடி பார்க்கும் இடத்தில் எழுதி வையுங்கள். வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தில் தகுந்த ஒப்பந்தங்கள் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க. கண்மூடித்தனமாக மூன்றாவது நபரை நம்பாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் சின்ன சின்ன தடங்கல் தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய வேலையை அடுத்தவர்களிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும், தீர்க்கமாக முடிவை எடுப்பீர்கள். அடுத்தவர்களைப் பற்றி கவலை கொள்ள மாட்டீர்கள். அடுத்தவர்களை பார்த்து பயமும் இருக்காது. எதுவாக இருந்தாலும் உங்கள் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். நல்லது நடக்கும், நேர்வழியில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் வந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதி தேவை. ஆர்ப்பாட்டம் கூடாது. நிதானம் தேவை, பொறாமை கூடாது. முன்கோபம் கூடாது. பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். தானாக சென்று அடுத்தவர்களுக்கு உதவியும் செய்யாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டுமே போதும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி உண்டாகக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். முன்பின் தெரியாத நபர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை செய்யும். அதிர்ஷ்டமான இந்த நாளில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். மனது ஆன்மீகத்தை நாடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சண்டையாக இருந்து வந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சில எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். இதனால் மன நிம்மதியும் உங்களுக்கு கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் இருக்கும் வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிரிகளோடு போட்டி போட்டு வெற்றி அடைவீர்கள். பண சிக்கலில் இருந்து வெளி வருவீர்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர்கள் முன்பு ஜெயித்து காட்டுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சில பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையிலும் சரி, வீட்டிலும் சரி, குழப்பமான சூழ்நிலை நிலவும். பிரச்சனைகளை கையாளும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். யாரையும் குறைவாக எடை போடாதீர்கள். எதிரியின் வலிமையை தெரிந்து மோதுவது தான் என்று உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். கொஞ்சம் ஏமாந்தால் பிரச்சனை உங்கள் பக்கம் திரும்பும் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய நலனையும் பார்க்காமல் அடுத்தவர்களுக்கு செய்யும் உதவி உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் நடத்த நினைத்த விஷயங்களை இன்று நல்லபடியாக நடந்தி முடிப்பீர்கள். மனைவியின் துணையால் வாழ்க்கை இனிக்கும். கணவரின் துணையால் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.