இந்த வார ராசிபலன் 18/11/2024 முதல் 24/11/2024 வரை..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவைப்படுகிறது. யார் என்ன சொன்னாலும் முதலில் செவி கொடுத்து கேளுங்கள். நல்லதோ கெட்டதோ அதை பொறுமையாக கேட்டாலே உங்களுக்கு நல்லது நடக்கும். முன்கோபடக்கூடாது. மனைவியோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. பெரியவர்கள் சொல்வதை எதிர்த்துப் பேசக்கூடாது. புதிய முயற்சிகளை கூடுமானவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். இந்த வாரம் முழுவதும் அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவு தான். உடல் ஆரோக்கியத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. சுமாரான இந்த வாரத்தை சூப்பராக மாற்ற வேண்டும் என்றால் தினமும் விநாயகரை கும்பிடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன அலைச்சல்கள் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் அமையும். வேலை சம்பந்தமாகவோ வியாபாரம் சம்பந்தமாகவோ வெளியூர் போகலாம். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். டார்கெட்டை முடிக்காத பிரஷர் கொஞ்சம் இருக்கும். ஒரு சில நாட்களில் இதெல்லாம் சரியாகிவிடும் இருக்கும். வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மேனேஜரோடு சண்டை போடாதீர்கள். அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நேரத்திற்கு வேலையை தொடங்குங்கள். நேரத்திற்கு வேலையை சரியாக முடித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் முருகா முருகா என்று சொல்லிவிட்டு உங்கள் நாளை துவங்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். வரவேண்டிய பணம் வராது. உங்களால் கொடுக்க வேண்டிய பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியாது. இழுபறியான சூழ்நிலை உண்டாகும். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் நாளை தள்ளி போகும். இன்றைக்கான வேலை ஒழுங்காக நடக்காது. இப்படி சின்ன சின்ன சிக்கல்களில் சிக்குவீர்கள். அன்றாட வேலையை அன்றாடம் செய்ய கொஞ்சம் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். பொழுதுபோக்கை குறைக்கணும். நண்பர்களோடு ஊர் சுற்றுவதை குறைக்க வேண்டும். கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த உழவாரப் பணியில் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். உறவினர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. ஆடை ஆபரண அணிகலன்கள் வாங்குவதற்கான செலவுகள் கொஞ்சம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் பாராட்டுகளும் கிடைக்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தினமும் சிவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். அன்றாட வேலையை சரிவர அன்றைக்கே முடித்து விடுவீர்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை துவங்குவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சீராக நடக்கும். பார்ட்னர்களின் உறவு நல்லபடியாக இருக்கும். வேலையில் நீங்கள் நினைத்ததை விட நல்ல பெயர் கிடைக்கும். எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளக் கூடிய திறமை வெளிப்படும். பேச்சாற்றலில் சிறந்து விளங்குவீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் இந்த வாரம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். தினமும் துர்கையை வழிபாடு செய்வது இந்த வாரம் நற்பலன்களை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியம் தேவை. கோழைத்தனமாக இருக்கக் கூடாது. தலை குனிந்து வாழக்கூடாது. யார் என்ன சொன்னாலும் பயப்படாமல் பதில் சொல்லுங்கள். துணிச்சலோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தை விரிவு படித்த என்னென்ன முயற்சிகள் இருக்கிறதோ அதை எல்லாம் தேடி தேடி செய்யுங்கள். சோம்பேறியாக இருப்பவர்களுக்கு சின்ன சின்ன நஷ்டம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள் நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கிறது. எதிலும் கவன குறைவு இருக்கக் கூடாது. பத்து ரூபாய் பணமாக இருந்தாலும் அதை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். வேலையில் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. முன்பின் தெரியாத நபரோடு பழக வேண்டாம். குறிப்பாக எதிர்பாலின நட்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் அதிக முதலீடு செய்யாதீர்கள். தெரியாத தொழிலை துவங்காதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். நோயுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த செலவுகளை உதவியாக செய்யுங்கள் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சூடக் கூடிய வாரமாக இருக்கும். நிறைய புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை மன நிறைவை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகள் ஒன்று சேர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். தினமும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக்கூடிய வாரமாக இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தாலும் முயற்சி செய்யவில்லை என்றாலும் உங்களுக்கான நல்லதை கட்டாயம் கடவுள் கொடுத்து விடுவான். பெருசாக பிரச்சனைகள் இல்லை. வேலையில் சின்ன சின்ன தொந்தரவுகள் வரும். எதிரிகளால் சின்ன சின்ன சூழ்ச்சிகள் நடக்கும். அதையெல்லாம் நீங்கள்தான் சரி செய்ய வேண்டும். சமயோசித புத்தியோடு செயல்பட வேண்டும். எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பி விடக் கூடாது. வியாபாரத்தில் எதிராளிகளை குறைத்து எடை போடக்கூடாது. உஷாராக நடந்து கொள்ளுங்கள். உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியமான உணவை நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. தினமும் பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் டைம் டேபிள் போட்டு வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்றால், அந்த நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும். தேவையற்ற பேச்சுகள் தேவையற்ற பழக்கங்களை கைவிட்டு விடுங்கள். கெட்ட பழக்கம் கெட்ட சாகவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நல்லவர்களோடு பழகுங்கள். முடிந்தவரை இந்த வாரம் முழுவதும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது உங்களுக்கு நல்லது. வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்க வேண்டும். கூடா நட்பிலிருந்து விலகி இருங்கள். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இந்த வாரம் ஏமாற வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, தினமும் அங்காள அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும். எதிரிகளை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற பிரச்சனைகள் வரும். தேவையற்ற அலைச்சல் இருக்கும் தேவையற்ற வேலை பளு இருக்கும். வார துவக்கத்தில் கொஞ்சம் சோர்ந்து போய் தான் இருப்பீர்கள். ஆனால் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, வந்த டென்ஷனை எல்லாம் சரி செய்து இந்த வார இறுதியில் நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். ஆக உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையில் இருக்கும் டென்ஷனை வீட்டில் காட்டாதீங்க. மனைவியையும் கொஞ்சம் புரிந்து நடந்து கொள்ளுங்கள். தினமும் ஹனுமன் வழிபாடு உங்களை மன உறுதிப்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் டென்ஷன் அதிகமாக இருக்கும். ஒரு வேலையை பலமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் செலவை குறைக்க வேண்டும். மேலதிகாரிகளோடு சண்டை போடக்கூடாது. கொஞ்சம் அனுசரித்து செல்லும்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தேவையில்லாத விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யக் கூடாது. உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தினமும் ஐயப்பன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.