இன்றைய ராசிபலன் - 15.11.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். சில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், நண்பர்களும் உறவுகளும் உங்களை கைவிட மாட்டார்கள். பிரச்சனைகள் தீரக்கூடிய நாள், சந்தோஷம் வரக் கூடிய நாள், நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாள். நாள் இருதியில் மனது எதையோ சாதித்தது போல சந்தோஷமாக இருக்கும். இன்று மாலை இறை வழிபாடு செய்ய தயாராகிக் கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்களில் இருந்து வெளிவரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும். வேலையில் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்திருந்தவர்கள் எல்லாம் இன்று உங்களை விட்டு விலக வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் அளிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வரும் வாய்ப்புகளை எக்காரணத்தைக் கொண்டும் நழுவ விட வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிரமங்கள் வரும். தர்ம சங்கடமான சூழ்நிலை உண்டாகும். இரண்டு பேருக்கு மத்தியில் சிக்கிக் கொள்வீர்கள். யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். இன்றைய தினம் மௌன விரதம் இருப்பது நல்லது. அம்மா மனைவி, அண்ணன் தம்பி இப்படி உறவுகளுக்கு இடையே கூட பிரச்சனை வரலாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உங்கள் பிரச்சினையாக இருந்தாலும் இன்று பெருசாக பேச வேண்டாம். உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று ரொம்பவும் அசதியாக இருக்கும். சோர்வு இருக்கும். அன்றாட வேலையில் கூட முழு கவனம் செலுத்த முடியாது. உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல் அதிகாரிகளுடைய பேச்சை தவறாமல் கேளுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். சொன்ன வேலையை முடித்துக் கொடுப்பது உங்களுடைய கடமை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நஷ்டமான தொழில் லாபத்தில் செல்லும். வேலையில் மேலதிகாரிகளோடு சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சினைகளை பெருசாக்க கூடாது. சுமூகமாக பேச வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரும். சேமிப்பு கரையும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி அக்கறை காட்ட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுகபோக வாழ்க்கையாக இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல உறக்கம், நல்ல மரியாதை எல்லாமே கிடைக்கும். பெரிசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உறவுகளோடு மட்டும் சின்ன சின்ன வாக்குவாதம் வரும். பொறாமை குணத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, உங்களுடைய சொந்த, சந்தோஷமான, வெற்றி கிடைக்கக்கூடிய விஷயங்களை அடுத்தவர்களிடம் அனாவசியமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற கவலைகள் இருக்கும். எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டே, இன்றைய நாளை வீண் செய்வீர்கள். நேரம் போனதே தெரியாது. கடைசியில் வேலையெல்லாம் பெண்டிங்கில் இருக்கும். இந்த நாள் இறுதியில் நீங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் ஆகவே, இந்த நாள் துவங்கும் போதே உஷாராக இருந்துக்கோங்க. வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பது உங்களுக்கு நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய பேச்சில் தெளிவு இருக்கும். யாராக இருந்தாலும் வெட்டு ஒன்று தொண்டு இரண்டு என்று பேசுவீர்கள். மன பயம் ஒரு துளி கூட இருக்காது. இந்த துணிச்சல் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு, இன்று நல்ல வாய்ப்புகளை கொடுக்கப் போகிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் கடன் கொடுக்காதீங்க, பெருசாக எந்த ஒரு முதலீடும் இன்று செய்ய வேண்டாம், டிஸ்கவுண்ட் ஷாப்பிங் செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். புதுசாக சந்திக்கும் நபரிடம் உஷாராக பழகவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். இதனாலே நிறைய நல்ல விஷயங்கள் உங்கள் கையை விட்டு செல்லும். பயமும் அக்கறையும் இருக்க வேண்டியதுதான், அளவுக்கு மீறி பயம் இருந்தால் அதுவே நமக்கு ஆப்பு வைத்துவிடும். எல்லா இடத்திலும் தலைகுனிந்து நிற்க வேண்டாம். தலை நிமிரக் கூடிய இடத்தில் தலை நிமிர வேண்டும், பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும், நமக்கானது அப்போது தான் கிடைக்கும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்ன சின்ன டென்ஷன் உண்டாகும். எதனால் இந்த காரியத்தை செய்தோம் என்று யோசித்து யோசித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இனி தவறுகளை செய்யக்கூடாது, செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அன்றாட வேலையை சுறுசுறுப்போடு செய்யுங்கள். அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நல்லதே நடக்கும்.