Tuesday, 5 November 2024

வெளிநாடு அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 14இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி..!!!

SHARE


வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 14 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக 14 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டவர் , இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இளைஞன் அது தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து , யாழ் . நீதவான் நீதிமன்றில் இளைஞனை நேற்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்திய வேளை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
SHARE