Tuesday, 12 November 2024

இன்றைய ராசிபலன் - 12.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டதை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நண்பர்கள் உறவினர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று புரிந்து கொள்வீர்கள். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பீர்கள். உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வெள்ளந்தியாக அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையற்ற கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுகமான நாளாக இருக்கும். பெருசாக எந்த டென்ஷனும் இருக்காது. எல்லா வேலையையும் அந்தந்த நேரத்தில் சரியாக நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுபசலவை ஏற்படுத்தும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். சின்ன ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வேலையிலும் தொழிலிலும் பெரிதாக பிரச்சனைகள் இருக்காது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்கவலை இருக்கும். எதையோ சிந்தித்துக் கொண்டே இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள். இருப்பினும் வேலையிலும் தொழிலிலும் அக்கறை குறையாது. எப்படியாவது முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உத்வேகம் உங்களை ஊக்குவிக்கும். நல்லது நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுங்கள். தாமதமாக ஒரு வேலையை துவங்கும்போது சில பல பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக பயணம் செய்பவர்கள், முக்கியமான வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எல்லா விஷயங்களையும் பிளான் செய்ய வேண்டும்‌. டிரெயின் புக் பண்ணி இருக்கீங்க, பஸ் புக் பண்ணி இருக்கீங்க அப்படின்னா குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு அந்த இடத்திற்கு செல்ல தயாராகிக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நீண்ட நாள் வராமல் நிலுவையில் இருந்த பணம் கையை வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். மனைவிக்கு தேவையான தங்கம் பொன் பொருள் ஆகியவற்றை பரிசுப் பொருட்களாக கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் எதிர்பார்த்த நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். திறமை வெளிபடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கையில் அடுத்த நிலையை அடைவதற்கு இந்த நாள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் உங்களுடைய வீட்டில் மீண்டும் நடக்கும் காதல் கை கூடும். வண்டி ஓட்டும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கிறது. புதிய நட்புகள் உங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். பிரச்சனை செய்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளால் சேமிப்பு கரையும். கொஞ்சம் டென்ஷன் உண்டாகும். வேலையிலும் தொழிலிலும் முழு கவனத்தை செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். குடும்பத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாளை கொஞ்சம் பொறுமையாக தான் கடந்து செல்ல வேண்டும். பொறுமையை எக்காரணத்தைக் கொண்டும் இழக்காதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் நேரத்தை வீணடிக்கும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் ஆர்வம் காட்ட வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அளவோடு பேசுங்கள். தேவையற்ற நட்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மாணவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பழக்க வழக்கத்திற்கு இக்காலத்தைக் கொண்டும் அடிமையாக வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. நிதிநிலைமை சீராகும். எதிர்பாராத பரிசு ஒன்று உங்களுக்கு கிடைக்கும். அது எந்த வழியில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. பாராட்டு பதவி உங்களை மன நிறைவடைய செய்யும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புது நண்பர்களின் அறிமுகம் நல்லது செய்யும்.
SHARE