Sunday, 10 November 2024

இன்றைய ராசிபலன் - 10.11.2024..!!!

SHARE



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்தும், இந்த வேலை முடியவே மாட்டேங்குது, அப்படின்னு ஏதாவது இருந்தால் இன்றைய நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் முயற்சிக்கும் முடியாத வேலை கூட நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட சக்சஸ் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். ஒரு முயற்சிகளையும் உங்களால் செய்ய முடியாது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது உங்களை குறை சொன்னால் கூட, காதை மூடிக்கொண்டு வேலையை செய்யவும். வாக்குவாதமோ சண்டையோ தேவையில்லை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் உடல் அசதி இருக்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. இதை சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியாது, சில பேருக்கு ஆரோக்கிய குறைபாடும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது. அது மட்டும் இல்லாமல் இன்று விடுமுறை நாள் தான். ரொம்பவும் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக எதுவும் பேசாதீங்க. அன்றாட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளுங்கள்‌. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கத்தியை பயன்படுத்தும் போது அல்லது மின்சார சாதன பொருட்களை பயன்படுத்தும் போதெல்லாம் கவனம் இருக்கட்டும் அலட்சியம் வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். எதிர்காலத்திற்கு வருமானம் வருவதற்கு தேவையான முதலீடை இன்று செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் முடிந்துவிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் நல்ல நிம்மதி கிடைக்கும். சுகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். வேலை தொழிலில் எல்லாம் பெருசாக பிரஷர் இருக்காது. இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு ஆன்மீக ரீதியாக நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையை வேகமாக செய்ய வேண்டும். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. விடுமுறை நாட்களாக இருந்தாலும் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால், அதை முடித்து தருவதில் ஆர்வம் காட்டுங்கள். அலட்சியமாக இருக்கும் போது கெட்ட பெயர் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அளவற்ற மன மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். நீங்கள் இழந்துவிட்டதாக நினைத்த ஒரு விஷயம் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். சந்தோஷத்திற்கு இன்று அளவு இருக்காது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பிரச்சனையாகவே இருக்கும். எதை நீங்கள் தொட்டாலும் அதை குத்தமாக சொல்வார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று ரொம்பவும் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது வந்து அட்வைஸ் செய்தால் போதும். காதை மூடிக்கொண்டு ஓடிவிடுவீர்கள். சின்ன சின்ன இடர்பாடுகளை இன்று சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் அனுசரித்து செல்லுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய உறவுகள் புதிய நட்புகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வாழ்க்கை பயணம் இனிதாக செல்லும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வந்து போகலாம். இருப்பினும் விடாமுயற்சியோடு செயல்படும் போது வெற்றி காணலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். உங்களுக்குள்ளவே ஆயிரம் கேள்விகள் எழும். எது நல்லது கெட்டது என்று ஒரு முடிவுக்கு வர முடியாது. அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் யாராவது ஒருவர் அமைதியாக இருக்கும் பட்சத்தில் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற டென்ஷனை நீங்களே தலைமையில் இழுத்து போட்டுக் கொள்வீர்கள். அனாவசியமாக பேசாதீர்கள். அவசியமான வேலையை செய்யாமல் இருக்காதீர்கள். பொறுப்புணர்வு உங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும். விளையாட்டுத்தனமாக இருந்தால் இன்றைய தினம் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
SHARE