Friday, 8 November 2024

இன்றைய ராசிபலன் - 08.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சேமிப்பை எல்லாம் வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். திறமை இருந்தால் உங்கள் காசை பத்திரப்படுத்தி வையுங்கள். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி இருக்கும். மேலதிகாரிகளிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். தொழிலை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் துணிவோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு பயமும் உங்கள் மனதில் இருக்காது. எதிரிகளாக இருந்தாலும் சரி, மேல் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, எல்லோரிடமும் ஒரே பேச்சுத்தான். இந்த துணிவு உங்களுக்கான வெற்றியையும், நியாயத்தையும் வாங்கி கொடுக்கும். கவலைப் படாதீங்க. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு அந்த கடவுளும் துணையாக நிற்பான்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். எதிர்பார்க்காத லாபமும் அதிர்ஷ்டமும் அடிக்க உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நிறைய அனுபவத்தை கொடுக்கும். வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வீர்கள்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை எளிமையாக சுலபமாக முடித்து விடுவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களை பார்ப்பவர்கள் ஒரு குறையும் சொல்ல முடியாது. உறவுகளோடு சுமூகமான உறவு ஏற்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லபடியாக பாராட்டுகள் கிடைக்கும். சில பேருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப விஷயத்தில் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். கணவன் மனைவி அனுசரணை வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கணக்கு துவங்கலாம். எதிர்காலத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இன்று வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். அளவோடு சாப்பிடுங்கள். வீட்டு சாப்பாட்டை சாப்பிடுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக மூன்றாவது நபரின் நம்பக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்க அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கான நாள் சோம்பேறித்தனத்தோடு இருந்தால் பிரச்சனைகள் வெடிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலை, செய்யாத வேலை எல்லாவற்றிற்கும் பாராட்டு உங்களைத் தேடி வரும். வருமானம் பெருகும். வாரா கடன் வசூல் ஆகும். பிரச்சனை செய்து கொண்டிருந்த நண்பர்கள் உறவுகள் எல்லோரும் உங்களுக்கு சாதகமாக மாறிவிடுவார்கள். இன்றைய நாளை என்ஜாய் பண்ணுங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். எந்த ஒரு வேளையிலும் முழுமனதோடு ஈடுபட முடியாது. இதனால் டென்ஷன் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் பேச்சை நம்பி எந்த வேலையிலும் காலை வைக்காதீங்க. உங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதை செய்யுங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. முன்கோபடக்கூடாது. வார்த்தையிலும் நிதானம் இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அகல கால் வைக்கக் கூடாது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வெளி ஆட்களிடம் ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று நிறைய உணர்ச்சி வசப்படுவீர்கள். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட உங்களை சமாளிக்க முடியாது. குறிப்பாக மேல் இடத்தில், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இன்று டென்ஷன் அதிகமாக இருக்கும். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருக்கும். கையில் இருக்கும் பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாக்கலாம். ஜாக்கிரதையாக இருங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் அனுசரனை தேவை. உங்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாலும் மனைவியிடம் இருந்து விடுதலை கிடைக்காது. குடும்பத்தை அனுசரித்து சென்றால் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.
SHARE