Thursday, 7 November 2024

இன்றைய ராசிபலன் - 07.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி உங்களுக்கான வேலையை முடித்துக் கொள்வீர்கள். பயம் என்பது உங்களுடைய மனதில் இன்று துளி கூட இருக்காது. இதனால் பெரிய மனிதர்களின் சந்திப்பும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற பெரிய பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பொருட்களை வாங்கி பணத்தை செலவழிக்காதீர்கள். இன்று ஷாப்பிங் போகாமல் இருப்பது நல்லது. குழந்தைகளோ மனைவியோ வெளியில் போகலாம் என்று சொன்னால் கூட உஷாராக இருந்து கொள்ளுங்கள். பர்ஸை வெளியில் எடுக்காதீர்கள். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். முருகனின் அருளால் இறை வழிபாட்டை நிறைவாக செய்து முடிப்பீர்கள். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். சின்ன சின்ன தாமதங்கள் ஏற்படலாம். பரவாயில்லை, இந்த நாள் இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். முயற்சிகளில் சில பல தடைகள் வந்தாலும், இந்த நாளில் நீங்களும் உங்களுடைய நம்பிக்கையும் தான் ஜெயித்திருக்கும். தைரியத்தோடு இன்றைய நாளை துவங்குங்கள். முருகர் உங்களோடு துணையாக இருப்பார்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமும் யோகமும் வீடு தேடி வர காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நல்ல செய்தியோ ஒரு நல்ல விஷயமும் நிச்சயம் நடக்கும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேளையிலும் தொழிலிலும் எதிர்பாராத வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. புதிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை கொடுக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். துன்பம் வரும். துயரம் வரும். சில பேர் இன்றைய நாளை அழுது கொண்டே கழிக்க கூட வாய்ப்புகளும் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் மன தைரியத்தை கைவிடாதீர்கள். இறைவன் மீது பாரத்தை வையுங்கள். வழக்கத்தை விட இன்று உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. வேலையில் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பீர்கள். உங்களுக்கான வேலை மட்டுமல்லாமல் உடன் இருப்பவர்களுடைய வேலைக்கும் உதவி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. அனாவசியமாக பேசக்கூடாது. இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். மனதில் முருகப்பெருமானை நினைத்துக் கொள்ளுங்கள். வேலையின் போது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மட்டும்தான் இன்றைய நாள் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத யோகம் அடிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. புதிய முதலீடுகளை தொழிலில் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். சொத்து சுகம் வாங்குவதற்கும் முயற்சி செய்யலாம். நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் இன்று நடக்கும். கடவுளும் உங்களுக்கு துணையாக நிற்பான். கணவன் மனைவி சண்டை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். எந்த டென்ஷனும் இருக்காது. வேலை தொழில் எல்லாம் அது பாட்டுக்கு சரியாக செல்லும்‌. நீங்கள் நினைத்ததை விட நிறைய லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்ததை விட நல்ல பெயரும் எடுப்பீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமாக மனைவியை தொந்தரவு செய்யக்கூடாது. வீட்டில் சண்டை வர வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டு பெரியவர்களிடத்தில் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும், சுப செலவுகள் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகளை எல்லாம் தகர்த்து விடுவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். இன்றைய நாள் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கூடவே இறையருளும் உங்களுக்கு இருக்கு நல்லது நடக்கும்.
SHARE