Wednesday, 6 November 2024

இன்றைய ராசிபலன் - 06.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நீங்கள் வேலையை செய்யவில்லை என்றாலும், உங்களுடைய வேலை தானாக நடக்கும். அது எப்படி. உங்களுடைய வேலையை உடன் இருப்பவர்கள் சுலபமாக சந்தோஷமாக செய்து கொடுப்பார்கள். ஏதோ ஒரு நல்லது இன்று உங்களை சந்தோஷப்படுத்தி கொண்டே இருக்கும். இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க. எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனது இன்று ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு சென்று உழவாரப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனநிறைவோடு இந்த நாள் நகரும். சில பேருக்கு வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பெருசாக பாதிப்புகள் இருக்காது. இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. வழக்கத்தை விட கூடுதல் கவனத்தோடு செயல்பட்டால் வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட விலகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். அன்றாட வேலையை செய்தால் போதும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடாதீங்க. ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்கள் மீது இறக்க குணம் வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நீங்களே செல்வீர்கள். மனநிறைவோடு உதவியும் செய்து முடிப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சண்டை சச்சரவோடு இருந்து வந்த கணவன் மனைவிக்குள் அன்னியூன்யம் உண்டாகும். வேலையில் பொறுமை தேவை. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனைவியோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். வீட்டு பெரியவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். இந்த நாள் இறை வழிபாடு செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது தானாக நடக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த வேலையை இன்று கையில் எடுக்கலாம், அந்த வேலை தடைகள் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடியும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கலைஞர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு பாராட்டு புகழாரம் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. சேமிப்புகள் கரையும் நாளாக இருக்கும். இன்னைக்கு ஷாப்பிங் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பர்ஸ் காலி. வேலையில் நீங்கள் நினைத்தபடி எல்லாம் நல்லபடியாக நடக்கும். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை செய்து கொடுத்து, நல்ல பெயரும் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக அத்தனை வேலைகளும் நடக்கும். நீங்கள் பேசினால் போதும், உங்களுடைய உத்தரவுக்காக நான்கு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். செல்வாக்கு உயரக்கூடிய நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். அடுத்தவர்கள் உங்களை நிமிர்ந்து பார்க்கும் இடத்திற்கு உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை கை நழுவ விட வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதிரிகள் விலகுவார்கள். சில எதிரிகள் நண்பர்களாக மாறி சரண் அடைவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையை எடுத்தாலுமே, அந்த விஷயத்தில் பிரச்சனை செய்ய நாலு பேரு உங்கள் கூடவே இருப்பார்கள். பிக்கல் பிடுங்கள் நிறைந்த இந்த நாளை நகர்த்திச் செல்வதில் சில சிரமங்கள் இருக்கும். வேறு வழி கிடையாது. நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்து இருப்பது தான் உலகம். இன்று வரும் பிரச்சனைகளை சவால்களை அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன் ராசிக்காரர்களுக்கு இன்று பொறாமை குணம் கொஞ்சம் இருக்கும். நமக்கு பின்னால் வந்தவர்கள், நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களுக்கு எல்லாம், முன்னேற்றம் இருக்கும். ஆனால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கும். இது எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். இருந்தாலும் உங்களுடைய தகுதியையும் உங்களுடைய திறமையும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான பதவியும் பெயர் புகழும் தேடிவரும். இன்று அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
SHARE