Tuesday, 5 November 2024

இன்றைய ராசிபலன் - 05.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சியில் இருந்த தடை விலகும். பிரிந்த சகோதர சகோதரி உறவு ஒன்று சேரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகளுடன் பாராட்டும் கிடைக்கும். முதலீடு செய்யும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் இருக்கும். நீண்ட நாள் சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை நீங்களே சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு செய்வது, அல்லது வேறு ஏதாவது பொருட்களை வாங்கி சொத்து சேர்ப்பது, போன்ற பயனுள்ள விஷயங்களுக்கு செலவுகளை மாற்றிக் கொள்ளுங்கள். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான மனநிலை இருக்கும். எந்த ஒரு குழப்பமும் உங்களுடைய முடிவில் இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். அடுத்தவர்களை சரியான முறையில் எடை போடுவீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். பெரியவர் சிறியவர் மேலதிகாரிகள் என்று ஒரு சின்ன பயமும் உங்கள் மனதில் இருக்காது. இந்த நாள் அதிரடியாக திறமை வெளிப்படும் நாளாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எப்படித்தான் வாழ்க்கையை நகர்த்திச் செல்லப் போகின்றோமோ என்று எதிர்காலத்தை பற்றி நிறைய சிந்திப்பீர்கள். கவலைப்படாதீங்க. விநாயகரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். குழப்பங்கள் நீங்கும். மன பயம் நீங்கும் அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இன்றைக்கான வேலையை நாளை தள்ளி போடாதீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன தடங்கல் தடைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். இருந்தாலும் நீங்கள் விடா முயற்சியில் இருந்து நகர மாட்டீர்கள். எடுத்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். இந்த நாள் இறுதியில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைக்கும். தடைகளை தகர்த்து வெற்றி காணக்கூடிய நாள் இந்த நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகள் வரலாம், சிக்கல்கள் வரலாம், போட்டி பொறாமை நிறைந்தவர்கள் உங்களோடு சண்டை போட வரலாம், இருந்தாலும் உங்களுடைய பொறுமை இன்று நிலையாக இருக்கும். எதற்கும் கோபப்பட மாட்டீர்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றும் திறமை இன்று வெளிப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்ற கடவுளின் சோதனைக்கு தள்ளப்படுவீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள்‌. வெளிவர முடியாத அளவுக்கு தவிப்பும் இருக்கும். இருந்தாலும் கடவுள் உங்களை கைவிடமாட்டான். நிறைய நல்ல அனுபவங்களை பார்க்க போகும் நாளாக இன்று அமையும். கவலைகள் வரும்போது கஷ்டங்கள் வரும்போது சோதனை வரும்போது நேர்மை தவறாமல் நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். விநாயகர் கோவிலுக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து, இன்றைக்கு உண்டான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் உயர்கல்வி படிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும் நிதி நிலைமை சீராகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவ செலவுகளை குறைக்க போராடுவீர்கள். அதற்கு உண்டான வெற்றியும் கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்த பதவியும் கிடைக்கும். சில பேர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சோம்பேறித்தனம் வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நீங்கள் போட்ட பிளான் ஒன்று, ஆனால் நடப்பது ஒன்றாக இருக்கும். இதனால் சின்ன தலைவலி உண்டாகும். சொன்ன நேரத்திற்கு, சொன்ன வேலையை முடித்து தராததால் சில டென்ஷன்கள் உண்டாகும். கவலைப்படாதீங்க எல்லா நாளும் ஒரே நாள் போல இருக்காது. இன்றைக்கான பிரச்சினைக்கு நாளை எளிதில் தீர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நிறைய புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆர்வத்தோடு உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் இன்று செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை கடுமையாக இருக்கும். உடல் வியர்த்து சோர்ந்து போகும் அளவுக்கு பிரஷர் இருக்கும். இருந்தாலும் இந்த நாளை சந்தோஷத்தோடு எதிர்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும், திருமணம் வரை செல்லும். மனது என்று சந்தோஷமாகத்தான். கஷ்டங்களும் இன்று உங்களுக்கு சுகமாக தெரியக்கூடிய நாளாக அமையும்.
SHARE