Thursday, 17 October 2024

காங்கேசன்துறை ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய மஹாகும்பாபிஷேகம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஜீர்னோத்தாரண புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.12 மணிமுதல் 10மணிவரை நடைபெறவுள்ளது.

இவ் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நாளை 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கிரியை வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 19,20 ஆம் திகதிகளில் விஷேட சாந்திப்பூசைகள் நடைபெற்று எண்ணெய் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்று மறு நாள் 21 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.





SHARE