Thursday, 31 October 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது..!!!

SHARE

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத்தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை நிற “லெக்சஸ்” மாடல் ஜீப் ஒன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
SHARE