Wednesday, 30 October 2024

ஆசிரிய கலாசலையில் பெருவிழா..!!!

SHARE

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி இன்று(30.10.2024) புதன்கிழமை காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குநர் அருட்பணி. வின்சன் அடிகளாரதும் , யாழ். அகவொளி நிறுவனத்தின் உதவி இயக்குநர் அருட்பணி .M. அன்ரன் ஜெரால்ட் அடிகளாரதும் பங்கேற்புடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நிகழ்வில் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் வாழ்த்துரை வழங்கினார்.

மாதாவின் திருச்சொரூபம் சிற்றாலயத்தில் இருந்து பிரதான மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பிரதான மண்டபத்தில் திருப்பலி இடம்பெற்றது.

நிகழ்வை கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் பொறுப்பு விரிவுரையாளர் பிரபாலினி தனம் , கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் ஜே. பாலகுமார் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

யாழ்ப்பாணத் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதியின் வழிப்படுத்தலில் விரிவுரையாளர் ஜேம்ஸ் அவர்களின் பங்கேற்புடன் மாணவ ஆசிரியர்களும் திருப்பலிப் பூசையில் பங்குபற்றி சிறப்பித்தனர்.







SHARE