Saturday, 26 October 2024

வடக்குக்கான ரயில் சேவை திங்களன்று மீள ஆரம்பம்..!!!

SHARE

யாழ்தேவி ரயில் நாளைமறுதினம் திங்கட்கிழமை (ஒக்.28) காலை 5.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு சேவையை ஆரம்பிக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்தார்.

ரஜரட்ட ரஜின ரயில் சேவை திங்கட்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் வரை இயக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதே ரயில் அனுராதபுரத்திலிருந்து பெல்லியத்த வரை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும்.

வடக்குப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக முதலிகே தெரிவித்தார்.

வடக்குப் பாதையின் மாஹோ - அனுராதபுரம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் கவனமாக இருக்குமாறும், ரயில் பாதையைக் கடக்கும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
SHARE