யாழில் விபத்து : இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!
வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே மீண்டும் விபத்து. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ் முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.