Wednesday, 30 October 2024

திருநெல்வேலியில் தமிழ் மக்கள் கூட்டணியினரின் பிரச்சாரம்..!!!

SHARE

தமிழ் மக்கள் கூட்டணியினர் திருநெல்வேலி பகுதிகளில் இன்றைய தினம் புதன்கிழமை பிரச்சார பணிகளை மேற்கொண்டனர்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களுடன் பிரச்சார பணிகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக திருநெல்வேலி சந்தை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை சந்தை வியாபாரிகள் உள்ளிட்ட பலர் தமது ஆதரவை தெரிவித்திருந்ததாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்தனர்.




SHARE