Thursday, 31 October 2024

காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி உயிரிழப்பு..!!!

SHARE

காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த காதலி தனது காதலனுடன் இணைந்து பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார்.

பின்னர், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டுள்ளார்.

இதன்போது, கடலிலிருந்த பாறைகளின் மேல் விழுந்த காதலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE