Friday 18 October 2024

பல கட்சிகள் அழைப்பு விடுத்தன அறவழியில் பயணிக்கவுள்ளதால் சுயேட்சையாகக் களமிறங்கினேன் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.கமலரூபன்..!!!

SHARE

பல கட்சிகள் எனக்கு ஆசனம் வழங்க தயாராக இருந்தன. ஆனால் எனது அரசியல் பயணம் அறவழியாக இருக்க வேண்டும் என்பதால் தான் சுயேட்ச்சையாக இறங்கியுள்ளான் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 02 இன் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஈ.எஸ்.பி கமலரூபன் தெரிவித்துள்ளார்

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனது அரசியல் பிரவேசம் நேர்மையாக இருக்க வேண்டும். அறவழி சார்ந்த பயணமாக இருக்க வேண்டும். சில கட்சிகளில் நேற்று கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு அனுபவம் உண்டு , ஒரு வீரனை நீக்கி விட்டு , அந்த இடத்திற்கு புதியவர் வரும் போது , அது அவரை பெரிதும் பாதிக்கும் ஆகவே அவ்வாறான ஆசன ஒதுக்கீடு எனக்கு தேவையில்லை.

எனது அரசியல் அறவழியாக இருக்க வேண்டும் என்பதால் தான் சுயேட்ச்சையாக இறங்கியுள்ளான் ஒரு கட்சியின் தலைவர் , அல்லது குழுவின் தலைவர் சுய ஒழுக்கத்துடன் இருக்கும் போதே அவர்களின் கீழ் உள்ளவர்களும் சுய ஒழுக்கத்துடன் இருப்பார்கள்

தமிழர்களுக்கு வாக்களிக்கா விட்டால் அவர்கள் தமிழர்கள் இல்லை என சொன்னார்கள் இதா பண்பு ? இளையோரை சுயஒழுக்கங்களுடன் நல்வழிபடுத்த வேண்டும்

அதனால் தான் அறவழி அரசியல் பயணத்திற்கு சுயேட்சை குழுவே எனக்கு முக்கிய தெரிவாக இருந்தது. எனது அரசியல் பயணமானது 30 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என நம்புகிறேன். இரண்டு வருடங்களின் பின்னர் , கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவெடுப்பேன்.


இந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட பல கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன வாய்ப்புக்கள் இப்படி கதவை தட்டாது என கூறினார்கள். நான் சொன்னேன் வாய்ப்புக்களை எனக்கு உருவாக்கி கொள்ள தெரியும் என்றேன்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனது இலக்கு , உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி உறுப்பினரான பின்னர் மக்கள் சேவைகளை செய்த பின்னர் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அதில் மக்கள் அறிந்த வேட்பாளராக களமிறங்க இருந்தேன். அது துரதிஸ்ட வசமாக உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தேர்தலில் எமக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றால், சுழற்சி முறையில் ஏனையவர்களுக்கு ஆசனங்களை வழங்குவேன். தென்மராட்சி , வடமராட்சி கிளிநொச்சி போன்ற தேர்தல் தொகுதி மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் இல்லை. அதேபோன்று பெண்களுக்குமான பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களுக்கு சுழற்சி முறையில் ஆசனங்களை வழங்க முடியும்.

எமது தேர்தல் விஞ்ஞாபனம் தீபாவளி அன்று வெளியிடப்படும். அதில் முக்கியமான ஐந்தம்ச கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

SHARE