Monday 21 October 2024

மலேரியா அற்ற நாடாக எகிப்து பிரகடனம்..!!!

SHARE

மலேரியா அற்ற நாடாக எகிப்தை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது எகிப்துக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம் எனவும் நோயை ஒழிப்பதற்கான சுமார் நூற்றாண்டுகால உழைப்பின் அதிகபட்ச பலன் இதுவெனவும் தெரிவித்து உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

"மலேரியா எகிப்திய நாகரீகத்தைப் போலவே பழமையானது என்ற போதிலும் எகிப்தை எதிர்காலத்தில் இந்நோய் பாதிக்கப் போவதில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரைசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் இதுவரை 44 நாடுகள் மலேரியா அற்ற நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE