Sunday, 13 October 2024

ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!!!

SHARE

ஜனநாயக தேசிய கூட்டணியின் (தபால்பெட்டி சின்னம்) வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஆரம்ப பரப்புரைக்கூட்டமும் இன்று(13) நடைபெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்- ஐ. சிவசாந்தன்




SHARE