Saturday, 12 October 2024

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு..!!!

SHARE

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்று வெள்ளிக்கிழமை (12) திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE