Wednesday 23 October 2024

இன்றைய ராசிபலன் - 23.10.2024..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெரிய அளவில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. அந்தந்த வேலையை அந்த நேரத்தில் முடித்தாலே போதும். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்லி பழகாதீர்கள். அடுத்தவர்களை பாராட்டும் மனம் இல்லை என்றாலும் சரி, இன்னைக்கு அடுத்தவர்களை குறை சொல்வது அவ்வளவு சரியாக வராது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செல்லும். உங்களுடைய வேலை எந்த விதத்திலும் தடைபடாது. ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தீபாவளிக்கு புத்தாடைகள் எடுக்க குடும்பத்தோடு வெளியில் செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது.



மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய வேலை இருக்கும். ஒரு நிமிடம் கூட ஓய்வு இருக்காது. உழைத்து உழைத்து இன்று மாலை உடல் சோர்வை ஏற்பட்டு விடும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்துக்கு குறைவே இருக்காது. பிரச்சனைகளிலிருந்து முழுசாக வெளி வருவீர்கள். மனக்கசப்பு நீங்கும். மன அழுத்தம் நீங்கும். விட்டதை பிடிப்பதற்கு விடாமுயற்சியை மேற்கொள்வீர்கள். கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும். நேரத்தை சரியாக செலவு செய்தால், உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. தேவையற்ற சிந்தனைகளை மட்டும் விட்டு விடுங்கள்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகளும் வரும். தேவையற்ற பிரச்சனைகள் பின் தொடரும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நாளை சுமூகமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் கோபப்படக்கூடாது. அவ்வளவுதான்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். தொழிலில் லாபம் உண்டாக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய் மாமன் உறவால் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.



துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடப்பதற்கான வாய்ப்புகள் வரும். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். வீட்டு சாப்பாடு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு செலவுகள் இருக்கிறது. ஒன்று பண்டிகை பர்ச்சேஸ். இல்லை என்றால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டியதாக இருக்கும். இப்படி ஏதாவது ஒரு வகையில் செலவு வரும். சில பேருக்கு நீண்ட தூர பயணம் செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. சுற்றுலா செல்வதற்கு சில செலவுகளை செய்வீர்கள். இப்படி ஏதாவது ஒரு வகையில் பர்ஸ் காலியாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கை நிறைய பணம் இருக்கும். ஆனால் செலவு வரிசை கட்டி நிற்கும். கவலைப்படாதீங்க செலவுக்கான பணம் கைக்கு வந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். செலவு செய்யும்போது அழுது கொண்டே செலவு செய்யக்கூடாது. வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தள்ளுபடி விலையில் ஏதாவது பொருளை வாங்கி ஏமாற வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பத்து ரூபாய் பொருளை, சலுகையில் ஐந்து ரூபாய்க்கு வாங்குவீர்கள். பாதிக்கு பாதி உங்களுக்கு லாபம் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். தொழிலில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாட்னரை முழுசாக நம்ப வேண்டாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் பின்தொடரும். மேலதிகாரிகளுடன் கோபம் வேண்டாம். அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை. மூன்றாவது நபர் பேச்சை கேட்கும் போது பிரச்சனை வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு லேசாக இன்று மன நிம்மதி கெட்டுப் போகும். பிடித்தவர்களோடு சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது‌. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுக்கு பணம் இருக்காது. அடுத்தவர்களிடம் கை நீட்டவும் தன்மானம் இடம் கொடுக்காது. இப்படி சில பல சங்கடங்கள் நிறைந்த நாள் இது.
SHARE