Sunday 20 October 2024

இன்றைய ராசிபலன் - 20.10.2024..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாக கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியடையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த பந்தங்களோடு ஜாக்கிரதையாக பேச வேண்டும். நெருங்கிய சொந்த பந்தங்களை இழப்பதற்கு சில வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெறுக கூடிய நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் உங்கள் கைக்கு பணம் வந்து சேரும். பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆனால் வேலை தொழில் இதில் கூடுதல் கவனம் தேவை. பண்டிகை உற்சாகத்தில் கடமைகளில் இருந்து தவறி விடக்கூடாது.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியாது. இதனால் சின்ன டென்ஷன் ஏற்படும். அலுவலகத்திலும் கொஞ்சம் கெட்ட பெயர் எடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அசதி இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு, வீட்டிலேயே கூட ஓய்வு எடுக்கலாம் தவறு கிடையாது. முடியாத காரியத்தை முயன்று கெட்ட பெயர் எடுக்க வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். சில வேலைகளை செய்யலாமா வேண்டாமா என்று குழப்பத்தோடு இருப்பீர்கள். கவலைப்படாதீங்க உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்கு. சின்ன சின்ன பிரச்சனைகளை கடவுள் உங்களுக்கு கொடுத்தாலும், இறுதியில் கைவிட மாட்டான். நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் வேலை அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்களுடைய வியர்வை பூமியில் சிந்தும். அந்த அளவுக்கு கடினமாக உழைத்து வெற்றி காண்பீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். இறைவனின் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். ரொம்ப நாள் பிரிந்த நண்பர்கள், காதலி, உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. காதல் திருமணம் வரை செல்லும். எதிர்பாராத நல்லது உங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பமுனையாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று காலை கொஞ்சம் சோர்வான நாளாக துவங்கினாலும், போகப் போக உங்களுடைய சுறுசுறுப்பு உயரும். எப்படியாவது இந்த பிரச்சனைகளை முடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பீர்கள். உங்களுக்கு மட்டும் நல்லது நினைக்காமல், உங்கள் இதை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைத்தே தீர வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கேற்ற வெற்றி கிடைக்கும். கலை துறையினருக்கு இன்று பெரிய அளவில் திருப்புமுனை அமையக்கூடிய நாளாக இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எப்போதோ முதலீடு செய்த தொகையிலிருந்து உங்களுக்கான வருமானம் வரும். சொத்து சுகம் வாங்குவதற்கு கூட சில பேருக்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவியின் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். முதலாளி என்ன சொல்லி விடுவாரோ, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ, நண்பர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ, வாழ்க்கைத் துணை என்ன சொல்லி விடுவார்களோ, இப்படி அவரவர் பிரச்சனைக்கு ஏற்ப அவரவர் அடுத்தவர்களை பார்த்து வாழக்கூடிய சூழ்நிலை இன்று உண்டாக்கும். உங்களை நீங்களாக வாழ விட மாட்டார்கள். அடுத்தவர்களுக்காக நடிக்க வேண்டிய சூழ்நிலை இன்று உண்டாகலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எவ்வளவு புது விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும், கவனத்தோடு கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியிலும் தேர்விலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமையால் நிறைய விஷயத்தை சாதித்துக் கொள்வீர்கள். சில பேருக்கு வெளியூர் சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் யோகமான நாளாக இருக்க போகின்றது. கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்றுதான் மனசு சொல்லும். ஆனால் எதையுமே மூளை கேட்காது. அதை இன்ற தலைகீழாக புரட்டிப் போட்டு. மனதில் நினைத்த அத்தனை நல்ல விஷயங்களையும் செய்து காட்டுவீர்கள். உங்களுக்கு நிறைய நன்மைகள் இன்று காத்துக் கொண்டிருக்கிறது. நிறைய அனுபவங்களும் காத்துக் கொண்டிருக்கிறது.
SHARE