Saturday 19 October 2024

இன்றைய ராசிபலன் - 19.10.2024..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று இனிமையாக பேசி அனைவரையும் வசியம் செய்து விடுவீர்கள். உங்களைப் பார்த்தால் இன்று எல்லோருக்கும் பிடிக்கும். நிறைய காரியங்களை பேசி பேசியே சாதித்துக் கொள்வீர்கள். உங்களுடைய அழகு மேம்படும் நாளாக இருக்கும். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். வசியம் என்பது தவறான வார்த்தை அல்ல. உங்களுடைய திறமை ஆற்றல் அழகாக வெளிப்படக்கூடிய நாளை தான் அப்படி சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ள உங்களுடைய இறக்க குணம் இன்று காரணமாக இருக்கும். ஆகவே பாவம் பார்த்து யாருக்கும் எந்த உதவியும் செய்யாதீங்க. அப்படி உதவி செய்வதாக இருந்தால் ஒன்றுக்கு பலமுறை யோசித்து சிந்தித்து செயல்படுவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.




மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக ஏற்றுக் கொண்டு அதை சரிவர செய்து முடிப்பீர்கள். பாராட்டு கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சட்டை சச்சரவுகள் நீங்கும் சுப செலவுகள் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுப்பீர்கள். குழப்பமான நிலையில் கூட தெளிவாக சிந்திக்கும் உங்களுடைய இந்த திறமை கடவுள் கொடுத்த பரிசு. அதை சரியான விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள். வருமானம் அதிகரிக்கும். பண்டிகையை கொண்டாட தேவையான அத்தனை வேலைகளும் நடக்கத் துவங்கும்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அணுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பிரிந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேரும். நீண்ட நாட்களாக செல்ல முடியாத குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வேலை எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய முன்னேற்றம் நிறைந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் விட்ட இடத்தை பிடிக்க போராடுவீர்கள். நல்ல லாபத்தையும் நல்ல பெயரையும் திரும்பவும் மீட்டெடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசி இறைவனின் ஆசியும் கிடைக்கும்.



துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள், சின்ன சின்ன புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். யாரிடமும் அநாவசியமாக வாக்கு கொடுக்கக் கூடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். நேரத்திற்கு தூங்க வேண்டும். சரியான நேரத்தில் வேலையை முடித்து விடுங்கள். எந்த ஒரு வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்தோடு உட்காராதிங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரும். தேவையற்ற டென்ஷன்கள் இருக்கும். ஒரு வேலையையும் சரியாக செய்து முடிக்க முடியாது. எதிரிகளை சமாளிப்பதில் கொஞ்சம் நேரம் வீணாகும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்த பாராட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த எதிர்ப்பு சரியாகும். உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல், திட்டிய எதிரிகள் கூட இன்று நண்பர்களாக மாறிவிடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கமிஷன் தொழில் கலைகட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் நகர்ந்து செல்லும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். தொழிலில் மட்டும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் கணக்கு வழக்குகள் சீராக இருக்கட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும். தேவையற்ற டென்ஷன்கள் இருந்து விடுபடுவீர்கள். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை சரியாக செய்து கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். கொஞ்சம் செலவுகள் இருக்கத்தான் செய்யும். வேறு வழி கிடையாது. அத்தியாவசிய செலவை தவிர்க்க முடியாது.
SHARE