Thursday, 17 October 2024

இன்றைய ராசிபலன் - 17.10.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை வராது என்று முடிவு கட்டி வைத்த பணம் கூட உங்கள் கையை வந்து சேரும். மனநிறைவு ஏற்படும். சில பேருக்கு சொத்து சேர்க்கை கூட உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கோர்ட் கேஸ் வழக்குகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இரண்டு பேர் வேலையை சேர்த்து ஒருவரே செய்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளோடு ஒற்றுமை நிலவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்த்து பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் உறவுகள் கூட இன்று உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். வீட்டில் கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. பிள்ளைகளின் முன்பு சண்டை போட்டால் அது குடும்ப ஒற்றுமையை கெடுத்து விடும் ஜாக்கிரதை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தக்க நேரத்தில் உதவி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்களை காப்பாற்ற நாலு பேர் உதவி செய்வார்கள். அவர்கள்தான் நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்து. நிறைய நல்ல பாடங்களை கற்றுக் கொள்ளக்கூடிய அனுபவம் நிறைந்த நாளாக இன்று அமையும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். பெருசாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த நாள் செல்லும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல தூக்கமும் இருக்கும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இன்று லாபம் நிறைந்த நாளாக அமையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கவனக்குறைவாக செய்யக்கூடிய வேலைகள் உங்களுக்கு நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும். வேலையிலும் பிரச்சனைகளை வரவைத்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். தொழிலிலும் அதிக கவனம் தேவை. யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்காதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலும் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். வீட்டில் பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். இளைஞர்கள் தகாத நட்பில் இருந்து விடுபட வேண்டும். தவறு என்று தெரிந்தே உங்களுடைய பாதையை மாற்றிக் கொள்ள வேண்டாம். சில பேருக்கு இன்று இந்த தவறை செய்து பார்ப்போமே என்ற துணிச்சல் வரும். ஆனால், தவறு என்று ஒரு காரியத்தை நாம் செய்ய தொடங்கினால் அது நம் வாழ்க்கையை திசை திருப்பி விடும். கவனமாக இருங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் இருக்கும். எந்த ஒரு வேலையையும் கையில் எடுத்து நிம்மதியாக செய்ய முடியாது. பதட்டத்தோடு இருக்கும் நேரத்தில் புதிய முடிவுகளை எடுக்காதீங்க. புதிய துவக்கத்தை செய்யாதீங்க. அன்றாட வேலையில் கவனத்தோடு இருக்க வேண்டும். பணத்தை கையாளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களை ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் புகழ்ச்சி பாடுவார்கள். செல்வாக்கு உயரும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவி குழந்தைகளோடு இன்றைய நாளை சந்தோஷமாக செலவழிக்க வாய்ப்புகளும் கிடைக்கும். பண்டிகையை கொண்டாட தயாராகிர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய பாட்னரோடு ஒப்பந்தமும் செய்து கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குடும்பத்தில் புது வரவு வர வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் துவங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல பெயர் கிடைக்கும். தேவையற்ற டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். உங்களுடைய வீட்டில் பண்டிகைக்கான வேலை துவங்கும். பண்டிகைக்கான செலவும் துவங்கும்.
SHARE