Monday, 14 October 2024

இன்றைய ராசிபலன் - 14.10.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா புது விஷயங்களையும் எளிதாக கற்றுக் கொள்வீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். பெயர் புகழ் உங்களை தேடி வரும். மேலதிகாரிகளுடைய பொறுப்பு அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்றைய நாள் சுறுசுறுப்பாக துவங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நேரத்தில், எதிர்பார்த்த உதவி சரியாக கிடைக்கும். இதனால் உங்களுடைய வேலைகள் எல்லாம் சுலபமாக நடந்து முடியும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த இடர்பாடுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். நல்லது நடக்கும்.



மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வாரத் துவக்கமே வேலை பளு அதிகமாக இருக்கும். இன்று மாலை வீடு திரும்பும் போது கொஞ்சம் சோர்வு ஏற்படும். வீட்டில் சின்ன சின்ன மனஸ்தாபம் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு எஇன்று மனக்குழப்பம் இருக்கும். தேவையற்ற டென்ஷனால் ஆரோக்கியம் கெட்டுப் போக வாய்ப்புகள் இருக்கிறது. டென்ஷனை குறைத்துக் கொள்ளவும். குழப்பமான வேலைகளை தள்ளி வைத்து விடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அனுபவ சாலிகளின் அறிவுரை உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது காதில் ஹெட்போன் அணிய வேண்டாம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் நிரம்பிய நாளாக இருக்கும். வீட்டில் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். செய்யக்கூடிய வேலையில் கவன குறைவு வரக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை நீங்களே சரி பாருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய அருமை பெருமைகளை மூன்றாவது நபரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டாம். கண் திருஷ்டியால் சின்ன சின்ன வீழ்ச்சிகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்ச மாட்டீர்கள். உங்களுடைய போக்கு எதிர்காலத்திற்கு நன்மையை செய்யும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கடவுளின் ஆசீர்வாதம் ஒரு சேர இருக்கும் நாள் இது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சில பேர் ரத்த தானம் செய்யக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபரை நம்பி எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேச வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த நாள் இறுதியில் கிடைத்துவிடும். நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு தேவையில்லாத டென்ஷனை உருவாக்கித் தர சில பேர் வேலை செய்வார்கள். எதிரிகளை சமாளிக்க முடியாது. இந்த நாள் போராட்டமும் வாக்குவாதமும் நிறைந்த நாளாக தான் இருக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். தெம்பாக சண்டை போடலாம்.
SHARE