Wednesday, 9 October 2024

இன்றைய ராசிபலன் - 09.10.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் இருக்கும். நீங்களாகவே முன்வந்து அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிரிந்திருந்த சொந்த பந்தங்கள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். பாவப்பட்டு அடுத்தவர்களுக்கு கடனாக பணம் கொடுக்க வேண்டாம். அதுவும், எழுத்து வடிவமாக, அக்ரிமெண்ட் போடாமல் கைமாத்தாக பணம் கொடுத்தால் அது திரும்பி வராது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரையும். திடீரென்று இந்த செலவு எப்படி வந்தது என்று தெரியாது. இங்கே இருக்கக்கூடிய பொருளை எடுத்து, அந்த இடத்தில் வைப்பீர்கள். சின்ன பொருள் மாற்றம், பெரிய அளவு செலவை கொடுத்து விடும். கொஞ்சம் ஜாக்கிரதியாக இருங்கள். இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைதான் வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக இருக்கும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். இறை வழிபாட்டின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். இறைவனின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆழ்ந்த சிந்தனை இருக்கும். இருக்கிற வேலை எல்லாம் எப்படி முடிப்பது என்று சிந்தித்தே பாதி நேரம் செலவாகிவிடும். ஆகவே சிந்திப்பதை நிறுத்தி விடுங்கள். வேலையை முழு முயற்சியோடு செய்யத் துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். உங்களுக்கான வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் அசதி இருக்கும். இருந்தாலும் வேறு வழி கிடையாது. அவரவர் வேலையை அவரவர் பார்த்து தானே ஆக வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய திறமையானது முழுமையாக வெளிப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல பதவியில் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வயதில் மூத்தவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை கவனிப்பது மிக மிக அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையில் எதிர்பார்த்த அளவு சம்பள உயர்வு கிடைக்கும். சில பேருக்கு தீபாவளி போனஸ் கிடைப்பதன் மூலம் இன்று நிதி நிலைமை உயர்ந்த நிலமைக்கு செல்லும். சந்தோஷம்தான் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோதனை நிறைந்த நாளாக தான் இருக்கும். நீங்கள் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பான். நீங்கள் ஒரு வேலை செய்ய தானாக வேறு ஒரு வேலை நடக்கும். இதனால் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். கவலைப்படாதீங்க, குலதெய்வ வழிபாடு செய்து விட்டு இந்த நாளை துவங்குங்கள். பிரச்சனை வந்தால் பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலையில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர்களால் தீர்க்க முடியாத சிக்கலை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் சின்ன சின்ன சங்கடங்கள் வரலாம். பார்ட்னரை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் ஈகோ பார்க்க கூடாது. தலைகனத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று பேராசைப்படக்கூடாது. பெரும் நஷ்டமாக வாய்ப்புகள் இருக்கிறது. அளவோடு வேலை செய்யுங்கள். அளவோடு செலவு செய்யுங்கள். அளவோடு சந்தோஷப்படுங்கள் போதும். அளவோடு அடுத்தவர்களோடு பழகினால் போதும். இன்று உங்கள் கையை மீறி, அளவுக்கு மீறி நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். அனாவசியமாக வாயைத் திறந்து பேச வேண்டாம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழிலில் அதிக கவனம் தேவை. புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். பண பரிவர்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்பவும் அமைதியாக இருக்கும். பெரிய பெரிய அளவில் வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் சர்வசாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் அசதி கொஞ்சம் இருக்கும். கால் வலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். மற்றபடி இன்று உங்களுக்கு இறைவனின் துணை இருக்கும்.
SHARE