இன்றைய ராசிபலன் - 08.10.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் முன் கோபப்பட மாட்டீர்கள். பிரச்சனைகளை பக்குவமாக கையாளுவீர்கள். ஒரு பெரிய அனுபவ சாலையின் திறமை உங்களிடம் வெளிப்படும். இந்த நாள் புதிய அனுபவங்களும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் விட்ட இடத்தை பிடிக்க நிறைய பாடுபடுவீர்கள். அதில் ஜெயித்தும் காட்டுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் இன்று ஏதாவது ஒரு சுபம் நடக்கும். வேலையிலும் தொழிலிலும் பெரிய இடர்பாடுகள் இருக்காது. சுமூகமாக செல்லும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வராத பணம் கையை வந்து சேரும். சில பேருக்கு இன்று சம்பளம் வரலாம். அந்த சம்பளம் தீபாவளி போனஸ் உடன் வந்தால் இரட்டிப்பு சந்தோஷம். வேலையில் இன்று அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரமோஷனுக்கு உங்கள் பெயர் முதல் இடத்தில் இருக்கும். எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட் செய்வாங்க. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்ற மன உறுதி உங்களிடத்தில் இருக்கும். கவலைப்படாதீங்க. உங்களுடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றியை அடையும். ஆனால் அதற்கு உண்டான தகுதிகளை முதலில் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேகத்தோடு செயல்படும் போது கொஞ்சம் விவேகத்தோடு செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றி பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத யோகம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்காத நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிர்ப்பாராத பரிசு மன சந்தோஷத்தை கொடுக்கும். இந்த நாளை உற்சாகத்தோடு எடுத்துச் செல்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்க்காத நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீங்கள் உதவி செய்த நபர் மீண்டும் உங்களை காயப்படுத்தும் போது தான் மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள். கவலைப்படாதீங்க அடுத்தவர்களை பற்றி தேவையில்லாமல் சிந்தித்து உங்கள் வேலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சிக்கலான விஷயத்தை கூட சுலபமாக முடித்து தருவீர்கள். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வீட்டு வேலை அதிகமாக இருக்கும். விருந்தாளிகளின் வருகையும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். எதிர்பாராத ஒரு நல்ல விஷயம் தொலைபேசி மூலம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தின் மூலம், உறவுகள் வட்டாரத்தின் மூலம் நல்லது நடக்கும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை எல்லாம் இந்த நாள் சுறுசுறுப்பாக துவங்குவீர்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு பிரச்சனை இல்லை. செலவுக்கு ஏற்ற பணம் கையிருப்பு இருக்கும்.