Saturday, 5 October 2024

இன்றைய ராசிபலன் - 05.10.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சுகமான நாளாக இருக்கப் போகின்றது. மனதிற்கு பிடித்த நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொழில் எல்லாம் அது அது பாட்டுக்கு நல்லபடியாக செல்லும். எந்த தொந்தரவும் இல்லை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உங்களை தேடி வரும். உயர் பதவிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தானாக கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். இடமாற்றத்தோடு வாய்ப்பு கிடைத்தால் நல்லது தான். சம்பளம் உயரும்பொழுது வாழ்க்கை தரமும் உயரும். சில விஷயங்களை விட்டுக் கொடுத்தால் தவறு கிடையாது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். செய்த வேலைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் மனநிம்மதி உண்டாகும். தொழிலில் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் விலகும். பாட்னரோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து செய்வீர்கள். தொழிலை விரிவு படுத்துவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய அனுபவங்கள் கிடைக்கும். எதிரிகள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையெல்லாம் சரியான நேரத்திற்கு முடித்துக் கொடுப்பீர்கள். டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு வெளியூர் பயணங்கள் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பயணத்தின் போது கவனமாக இருங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த ஒரு அலட்சியமும் இருக்கக் கூடாது. வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது நல்லது என்று சிந்தித்து செயல்படுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். உங்களுடைய விருப்பம் எல்லாம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை ஈட்டி எடுப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு செயல்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன தோல்வி கூட வரக்கூடாது என்று சிந்திப்பீர்கள். அயராது உழைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்வீர்கள். இந்த நாள் இறுதியில் மன நிறைவு ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வரக்கூடிய நாளாக இருக்கும். அதனால் துவண்டு போகக்கூடாது. விடாமல் முயற்சியில் ஈடுபடும் போது நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள். அனாவசியமாக மூன்றாவது நபரிடம் பேசாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்த வேலைக்கு கூட வேறு ஒரு ஒருவர் நல்ல பெயரை தட்டிக் கொண்டு செல்வார்கள். இதனால் கொஞ்சம் மனது சோர்வடையும் பொறாமை குணமும் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வீர்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் நண்பர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். நிம்மதியாக வேலை செய்வீர்கள். நல்ல சாப்பாடும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிறைவோடு இந்த நாள் செல்லும். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் என்று ஆன்மீக வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரஷர் வரலாம். மேலதிகாரிகளை சமாளிப்பதில் சிக்கல்கள் வரலாம். கோபமாக பேசாதீர்கள். பணிவோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
SHARE