Thursday, 3 October 2024

இன்றைய ராசிபலன் - 03.10.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று காலையில் உங்களுடைய வேலை சுறுசுறுப்பாக துவங்கிவிடும். அலுவலக வேலைகளை எல்லாம் மிச்சம் வைக்காமல் முடித்து விடுவீர்கள். தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நிறைய லாபம் ஈட்ட உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரும். தேவையற்ற டென்ஷன்கள் தலை மேல் இருக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. சக ஊழியர்களோடு கொஞ்சம் பொறுமையாக பேசவும். தொழிலில் வாடிக்கையாளர்களோடு பொறுமையாக பேச வேண்டும். பிரச்சனை செய்யும் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் அதை அனுசரித்து செல்லவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேளையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யாதீர்கள். குறிப்பாக சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாருடைய வம்பு வழக்கிலும் தலையிடக்கூடாது.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். வேலையில் மன நிம்மதி ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகள், தேவையற்ற நட்புகள் எல்லாம் இன்று உங்களை விட்டு விலகி விடும். நல்லதும் நல்ல காலமும் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களோடு ஜாக்கிரதையாக பேசுங்கள். உங்களுடைய சொந்த விஷயங்களை வெளியே சொல்ல வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். இதனால் மேலதிகாரிகளை சமாளிப்பதில் சிரமம் உண்டாகும். சின்ன சின்ன கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். பின்னடைவு ஏற்படும் போது சோர்ந்து போகக்கூடாது. முன்னுக்கு வர என்ன வழி இருக்கிறது அதை தேடி கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். வாழ்க்கையில் நிறைய நல்ல முன்னேற்றங்களை காணுவீர்கள். எதிரிகள் முன்பு தலைநிமிர்ந்து வாழ்வீர்கள். கடன் சுமை நீங்கும். சேமிப்பு அதிகரிக்கும். சகோதரர் பாசம் வெளிப்படும். நீண்ட நாள் பிரிந்த உறவோடு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் பதட்டம் இருக்காது. அவசரம் இருக்காது. உங்களுக்கான நாளாக இந்த நாள் அமையும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் மனது சந்தோஷமடையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை இருக்கும். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் செய்த ஒரு வேலை பெரிய அளவில் வெற்றி அடைய, நல்ல வாய்ப்புகளை தேடித் தரும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களிடம் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற நண்பர்களை உங்களிடமிருந்து தூர விலக்கி வையுங்கள். வாழ்க்கையில் குறுக்கு பாதையில் செல்லாதீர்கள். சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம் என்று யாராவது சொன்னால் அவங்க பக்கம் போகவே போகாதீங்க உஷாரா இருங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எல்லோரிடத்திலும் பணிவாக நடந்து கொள்வீர்கள். அதிகமாக முன் கோபம் கொண்ட நீங்கள் பணிவாக நடப்தை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். அப்படி ஒரு பக்குவம் உங்கள் இடத்தில் இன்று வரும். எல்லாம் ஒரு அனுபவம் தான். உங்களுடைய பணிவு உங்களுக்கு நிறைய நல்லதை தேடி கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு நடந்து கொள்வீர்கள். புதிய வேலையை கற்றுக் கொள்வது, புது இடங்களுக்கு சென்று புது வேலை தேடுவது, இப்படி நிறைய நல்ல புது விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்று அனுபவமாக கிடைக்கப் போகின்றது. உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இன்றைக்கான நாள் நிறைய பாராட்டுகளை பெற்றுக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு இன்று நினைத்ததை விட பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த நாள் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எல்லாம் டைம் டேபிள் போட்டது போல சரிவர நடக்கும். காலையில் என்ன நினைத்தீர்களோ, அதை நாள் முழுவதும் செயல்படுத்தி காட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் எல்லாம் தானாக உங்களை விட்டு விலகும்.
SHARE