Wednesday, 2 October 2024

இன்றைய ராசிபலன் - 02.10.2024..!!!

SHARE
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன தாமதங்கள் ஏற்படும். உங்களுடைய வேலையை எல்லாம் கொஞ்சம் முன்கூட்டியே துவங்க வேண்டும். அலுவலகத்திற்கு கிளம்புபவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் எல்லாம் அரை மணி நேரம் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்படவும். கடைசி நேரத்தில் சிக்கலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றால் வழக்கத்தை விட இன்று உங்களுக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் கூடுதலாக தேவைப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய பணம் சம்பாதிக்க கூடிய யோகம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வரலாம். அல்லது போனஸ் வரலாம். ஏதாவது ஒரு வகையில் லாபத்தை இன்று பார்ப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களோடு சந்தோஷத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். முன்னோர்களது வழிபாட்டையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகம் இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் சரியாக முடித்துக் கொடுத்து பாராட்டும் பெறுவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டை மனநிறைவோடு மேற்கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். எந்த பிரச்சனை நினைத்து யோசிப்பது என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒரு யோசனை உங்களை இன்று மனநிறைவோடு வேலை செய்யவிடாமல் தடுக்கும். மனநிலையை ஒரு நிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். சொத்து சுக சேர்க்கை இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை ஒன்று உங்கள் கையை வந்து சேரும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சாந்தமோடு இருங்கள். ஒரு தீர்வு கிடைக்கும். தேவையில்லாத டென்ஷனை ஏற்றுக் கொண்டால் குழப்பங்கள் தான் இன்னும் கூடுதல் ஆகும். இதனால் நல்ல நண்பர்கள் நல்ல உறவுகளை கூட இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது நிதானத்தை இன்று கையாளவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. மன நிறைவாக இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. எந்த ஒரு வேலையிலும் அவசரப்படக்கூடாது‌. முன்பின் தெரியாத நட்போடு பழக வேண்டாம். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்தும் போடாதீங்க. இன்று அன்றாட வேலையில் மட்டும் அக்கறை காட்டுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பணத்தின் மூலம் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இலவசமாக ஏதாவது பொருள் கிடைத்தால் உடனடியாக அதை வாங்காதீங்க. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு இருக்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் இருக்கும். புதிய முடிவுகளை சரிவரை எடுக்க முடியாது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். நிதானத்தை இழப்பீர்கள். வாய் தகராறு கைகலப்பு வரை கூட போகலாம். ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். முன்னோர்கள் வழிபாடு கட்டாயம் செய்யவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைவாக இருக்கும். முன்னோர்கள் வழிபாட்டை திருப்தியாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். எதிர்பாராத வரவு மன நிம்மதியை கொடுக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு.
SHARE