Saturday, 21 September 2024

யாழ். நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தியில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள்..!!!

SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலை 4.15 முதல் அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.
SHARE