யாழில், பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!
யாழ்.சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது-29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு விஷப் பாம்புக்கடிக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.