நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு- நாமல்..!!!
தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கி தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொண்டால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1994 முதல் ஜனாதிபதிகள் தாங்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவோம் என தெரிவித்துள்ள போதிலும் இன்னமும் அதனை செய்யவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பினால் அதனை தாமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.