Monday 23 September 2024

காபந்து அரசாங்கம் - நால்வர் கொண்ட அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி தகவல்..!!!

SHARE

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் அனுரகுமாரதிசநாயக்கவும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள் மக்கள் வழங்கிய ஆணையை இந்த அமைச்சரவை பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளுடன் இணையாமல் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம் மக்கள் வழங்கிய ஆணையை முன்னெடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் யார் என்ற கேள்விக்கு ஹரிணி அமரசூரிய குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, என தெரிவித்துள்ள அவர் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
SHARE