விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகளிற்கு - விசேட அறிவித்தல்..!!!
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.