ஆட்சி மாற்றத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவி விலகி வருகின்றனர்.
அந்த வகையில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸும் தற்போது பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.