Sunday 22 September 2024

வங்கிகள் நாளை திறந்திருக்கும்..!!!

SHARE

விசேட பொது விடுமுறை தினத்தை அரசாங்கம் அறிவித்த போதிலும், அனைத்து வர்த்தக வங்கிகளும் நாளை திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

நாளை (செப்டம்பர் 23) வங்கி விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக CBSL தெரிவித்துள்ளது.
SHARE