தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்..!!!
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி நேற்று இரவு 10 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.