யாழில், இரண்டு நாள் குழந்தை உயிரிழப்பு..!!!
பிறந்து இரண்டு நாட்களேயான பெண் சிசு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.
நாவாந்துறையைச் சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் குழந்தை ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
இந்நிலையில் மறுநாள் 18ஆம் திகதி சிசு உயிரிழந்துள்ளது. இம்மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.