Saturday 21 September 2024

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள்..!!!

SHARE

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

நுவரெலியா 80%

மொனராகலை 77%

பொலன்னறுவை 78%

இரத்தினபுரி 75%

கம்பஹா 80%

கொழும்பு 75% - 80%

அம்பாறை 70%

கிளிநொச்சி 68%

புத்தளம் 78%

களுத்துறை 75%

காலி 74%

வவுனியா 72%

மன்னார் 72%

பதுளை 73%

அம்பாந்தோட்டை 78%

கேகாலை 75%

அநுராதபுரம் 75%

மட்டக்களப்பு 69%

குருணாகல் 75%

திருகோணமலை 76%

கண்டி 78% - 80%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

மாத்தளை 74 %

யாழ்ப்பாணம் 65.9 %
SHARE