இன்றைய ராசிபலன் - 17.09.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். துணிச்சலோடும் தைரியத்தோடும் சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது செய்யும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. தேவையற்ற நட்பு வேண்டாம். நிதிநிலைமை சீராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கையை வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நிதி நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவு செய்யலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனோபக்குவம் இருக்கும். அடுத்தவர்கள் கேட்காமல் நீங்களாகவே சென்று உதவி செய்வீர்கள். அது உங்களுக்கு புண்ணியத்தையும் கொடுக்கும். நிறைய ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் இன்று உங்களுடைய மனது ஈடுபடும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். நிதி நிலைமை சீராகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று டைம் டேபிள் போட்டு வேலை செய்வீர்கள். உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். டென்ஷன் இருக்காது. சந்தோஷமாக இந்த நாள் நகர்ந்து செல்லும். உறவினர்கள் வீட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றிய சுய ரூபத்தை தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நல்லது கெட்டது இரண்டையும் புரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போகும். சமாளிப்பது உங்களுடைய திறமை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்களுடைய நாளை துவங்குவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட சேர்த்து, இன்றைக்கு செய்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். கடன் சுமை நீங்கும். வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு உண்டான வருமானமும் பெருகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக மாணவர்கள் கலைஞர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். புது வேலையில் சேர்வது, புது படிப்பை தொடங்குவது போன்ற காரியங்களை இன்று மேற்கொள்ளலாம். குடும்பத் தலைவிகளுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் பிள்ளையார் சுழி போடுவதற்கு ஏற்ற நாளாக அமையும். இன்று நீங்கள் துவங்கும் விஷயம் உங்களுக்கு லாபம் தான். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புது தொழில் ஆரம்பிப்பது, புது வேலைக்கு சேர்வது, அல்லது புதுசாக சீட்டு கட்டுவது இப்படி என்ன வேணும்னா நீங்க இன்னைக்கு பண்ணிக்கோங்க. அது சக்சஸ் தான்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு முறையிலேயே வெற்றிக்காண முடியாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அல்ல, எவ்வளவு தான் உழைத்தாலும் குறைந்த அளவு ஊதியம், குறைந்த அளவு நல்ல பெயர் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் மனசோர்வு அடையக் கூடாது. இன்றைய நாள் இறுதியில் இறை வழிபாடு செய்வது உங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் அதிகமாக வரும். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். புதிய எதிரிகள் உருவாகலாம். இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு எதிரியாக மாறலாம். முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். மனதை தியானத்தில் ஈடுபடுத்துங்கள். பிடித்த பாடலைக் கேளுங்கள். பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ராஜபோக வாழ்க்கை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். வேலை செய்யக்கூடிய நாள் தான் இருந்தாலும், உங்களுக்கு இன்று ராஜமரியாதை உண்டு. மேலதிகாரிகளின் அனுசரணையான பேச்சு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் வாழ்க்கையின் நிலை உயரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும். சந்தோஷத்தில் தலைகால் புரியாது. அப்படியே செலவு செய்து விடாதீர்கள். சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள். எதிர்காலத்திற்கு அதுதான் நல்லது. செலவை குறைத்து, வருமானத்தை பெருக்கணும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தணும். உங்களுடைய நேர்மை உங்களை காப்பாற்றி விடும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.