இன்றைய ராசிபலன் - 13.09.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாளாக இருக்கும். உங்களை பிரச்சனைகளுக்கு இழுத்து விட நிறைய பேர், நிறைய வேலைகளை செய்வார்கள். ஆனால் மன உறுதியோடு நீங்கள் தான் நேர்வழியில் நிற்க வேண்டும். யார் சொன்னாலும், எவ்வளவு பேராசை காண்பித்தாலும் குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். உஷாராக நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக கோர்ட்டு கேஸ் போலீஸ் விவாகரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த சண்டைகள் நீங்குவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தாய்மாமன் உறவால் நல்லது நடக்கும். நிதி நிலைமை சீராகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்திலிருந்து தெளிவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். பதவி உயர்வு கிடைக்க நிறைய பேருக்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். முன் பின் தெரியாத தொழிலை தொடங்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்கள் சொல்லும் ஆலோசனையை கேட்டுக் கொள்ள வேண்டாம். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுபவசாலிகள் உடைய அறிவுரையே நல்லதை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிம்மதியான நாளாக இருக்கும். வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். குடும்ப பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் அகலும். நிதி நிலைமை சீராகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் தொந்தரவு இருக்கும். உங்களுடைய வேலையை சொன்ன நேரத்தில் சரியாக செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். லாபம் வந்தாலும் செலவுகள் இரட்டிப்பாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கையான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் விடாமுயற்சியோடு எடுத்து செய்வீர்கள். மனம் சோர்ந்து போக மாட்டீர்கள். சின்ன சின்ன தோல்விகள் வரும்போதும், அதை எதிர்த்து போராடக்கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைய சந்தோஷம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சண்டை போட்டுக் கொண்டிருந்த மேனேஜர் முதலாளி கூட உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவன குறைவோடு இருக்கக் கூடாது. உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்ப விஷயத்தை அனாவசியமாக வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தாமதமான நாளாக இருக்கும். இன்றைய நாளை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கூடம் செல்பவர்கள் எல்லாம் டைம் டேபிள் போட்டு வேலையை செய்ய வேண்டும். இல்லை என்றால் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிளான் இல்லாமல் இன்னிக்கி வேலை செய்யக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தைரியம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டீங்க. உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனாலேயே சில உறவுகளோடு பிரச்சனைகள் வரும். தொழில் செய்யும் இடத்தில் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் உங்களை எதிரியாக பார்ப்பார்கள். கவலைப்படாதீங்க நேர்வழியில் நடப்பவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நீங்களே நிறைய படிப்பீர்கள். புதிய வகுப்புகள் சேருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொய் சொல்லி சமாளிக்காதீங்க. உண்மையை சொல்லி மாட்டிக் கொண்டாலும், பிரச்சனை கிடையாது. வீட்டில் வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த வேண்டும். அனாவசியமாக சில்லறை கடன் வாங்காதீங்க.