யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவிகளுக்கு 9A..!!!
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளனர்.
அதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்களும், யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 17 மாணவிகளும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 08 மாணவர்களும், உடுவில் மகளிர் கல்லூரியில் 06 மாணவிகளும், யாழ் . மத்திய கல்லூரியில் 02 மாணவர்களும் A தர சித்தி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேலும் பல பாடசாலைகளிலும் மாணவர்கள் A தர சித்திகளை பெற்றுள்ளனர்.