Tuesday, 10 September 2024

இன்றைய ராசிபலன் - 10.09.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று உழைத்தால் மட்டும் தான் முன்னேற முடியும். வெறுமனே இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு பல பிரச்சனைகள் வரும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. சுயநலம் இருக்கக் கூடாது. பொதுநலத்தோடு, சோம்பேறித்தனம் இல்லாமல் உழைக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு உங்கள் மனதாலும் இன்று கெடுதல் நினைக்காதீர்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்‌. யார் என்ன சொன்னாலும் உணர்ச்சிவச படாதீர்கள். போனது போகட்டும், நடந்தது நடந்து விட்டது என்று அடுத்த வேலையை பார்த்துக் கொண்டே இருங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது முழுவதும் இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோவிலுக்கு செல்வீர்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகளும் இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நேரம் கிடைக்கும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். இன்று இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தைரியமான நாளாக இருக்கும். ஒரு முடிவை தீர்க்கமாக எடுப்பீர்கள். எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். நல்லது தான். உங்களுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனதிருப்தியான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு நிறைய நல்ல விஷயங்களை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அரசுக்கு புறமான காரியத்தில் செயல்பட மாட்டீர்கள். நேர்மையான வழியில் நடந்து கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கு வரும். இரவு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து நீங்களே பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு இருக்கும். எப்பதான் தூங்க போறோமோ என்று நினைத்துக் கொண்டே இருப்பீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் கரடு முரடான நாளாக இருக்கும். எதிரிகளை சமாளிக்கவே முடியாது. பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சவால்களை சந்தித்து வெற்றி வாகை சுடக்கூடிய நாள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. எதற்கும் பயப்பட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லட்சியங்கள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய முடிவுகளை அதிரடியாக எடுப்பீர்கள். குடும்பத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது. பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடத்தில் இருக்க வேண்டும். பெரிய பிரச்சனை வந்துவிட்டதே என்று உடனடியாக சோர்ந்து போய் உட்காராதீர்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேகத்தோடு செயல்படக்கூடாது. விவேகத்தோடு செயல்பட வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பி இன்றைய வேலை இருக்கக் கூடாது. உங்கள் உழைப்பை நம்பி தான் இருக்க வேண்டும் ஜாக்கிரதை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையும் அமைதியும் தேவை. ஆர்ப்பாட்டம் இருக்கக் கூடாது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனமும், பணிவும் அவசியம் தேவைப்படுகிறது. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. ஆசிரியர்களிடம் அனுமதி கேட்காமல் எந்த ஒரு விஷயத்தையும் மாணவர்கள் செய்யக்கூடாது. கவனத்தோடு செயல்படுவோம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் பிரஷர் இருக்கும். தொழிலில் பிரச்சனை இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக ஓய்வு எடுப்பீர்கள். டென்ஷனை உங்களுக்கு நீங்களே குறைத்துக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் வர வேண்டும் என்றால் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வாங்க.
SHARE