இன்றைய ராசிபலன் - 09.09.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய நல்ல காரியங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி புரிவீர்கள். எதிர்காலத்தில் உங்கள் பெயர் சொல்லும் படி இன்று நீங்கள் ஒரு மரக்கன்றையாவது நடக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். இந்த இனிய நாளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நாளாக இருக்கும். எல்லா வேலையும் சுமுகமாக நடக்கும். வாரத் தொடக்கத்திலேயே அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். வாரத்தின் தொடக்க நாளாக இருந்தாலும் உங்களுக்கு இன்று எந்த அலைச்சலும் இருக்காது. குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். சுப செலவுகளும் உண்டாகும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலைவாய்ப்பில் நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் முயற்சிகளை கைவிடாதீர்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றிக்கான யோகம் வந்துவிட்டது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலை டென்ஷன் அதிகமாக இருக்கும். சொன்ன நேரத்தில் வேலையை முடித்து தராத சூழ்நிலை நிலவும். மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். இருந்தாலும் இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். வேலையை விட்டு விட வேண்டும் என்று எந்த சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். ஏற்பாடு பட்டாவது இன்றைய வேலையை முடிக்க வேண்டும் என்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு ஜெயித்து காட்டி புது அனுபவங்களை பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நஷ்டமெல்லாம் லாபமாக மாறும். நீண்ட நாள் வராமல் நிலுவையில் இருந்த பணம் வங்கி கணக்கில் வந்து சேரும். சொத்து சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆபரண சேர்க்கை ஆடை சேர்க்கையும் உண்டு. வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டவும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடாத நட்பில் இருந்து விலகி இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அரசு வேலைகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை கொடுக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். தோல்வியை ஒற்றுக்கொள்ள உங்களுடைய மனது ஏற்காது. இதனால் சில இடங்களில் வாக்குவாதம் வரும். விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். முன்கோபடக்கூடாது. டென்ஷனை குறைத்தால் தான் வேலை சரியாக நடக்கும். எப்போதுமே டென்ஷனாக இருந்தால் வேலையில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். எந்த குழப்பமும் இருக்காது. நல்லவர் கெட்டவர்களை அடையாளம் காணும் நாளாக இருக்கும். எதிரிகளை சுலபமாக வீழ்த்தி விடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். வருமானத்திற்கு மீறிய செலவை கட்டுப்படுத்தும் போது கடன் சுமைகளிலிருந்து தப்பித்தீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நிலுவையில் இருந்து சம்பளத் தொகை வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. ஆரோக்கியம் இல்லாத உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.