யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!!
விபத்தில் சிக்கி வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புற்றளை பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் , வடமராட்சி கல்வி வலய ஊழியரான யோகலிங்கம் அருள்காந்தன் (வயது 33) என்பர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.